காரைக்கால்

காரைக்கால் திருவேட்டக்குடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள்: அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்!

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன் திருவேட்டக்குடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து அவர் பேசுகையில், புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடர்ந்து முனைப்புடன் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

இவ்விழாவில் நிரவி–திருப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம், நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன், கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன