தமிழ்நாடு

இராசிபுரத்தில் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்!

இராசிபுரம், செப். 22:

இராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தினை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் இன்று முறைப்படி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் லி.மதுபாலன் முன்னிலை வகித்தார். தொடக்க நிகழ்வைத் தொடர்ந்து, பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவினை பரிமாறிய அமைச்சர், மாணவர்களுடன் கலந்துரையாடி திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

இவ்விழாவில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீப், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.என்.சதீஷ் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை உறுதிசெய்து கல்வியை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன