புதுச்சேரி

புதுச்சேரியில் சைக்கிளில் மைக் கட்டி ஒத்த ஆளாக பிரச்சாரம்: தட்டாஞ்சாவடி சுயேச்சை வேட்பாளர் ரகுவின் விநோத முயற்சி!

புதுச்சேரி:

புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் சைக்கிளில் மைக் செட் பொருத்திக்கொண்டு தனியாளாக வாக்கு சேகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதுச்சேரி ’10 ரூபாய் சட்ட இயக்கத்தின்’ பொறுப்பாளரான ரகு என்கிற ரகுநாதன், இத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவர் எந்தவொரு ஆடம்பரமும் இன்றி, தனது சைக்கிளிலேயே ஒலிபெருக்கி (மைக் செட்) அமைத்துக்கொண்டு, வீதி வீதியாகச் சென்று தனக்கு வாக்களித்தால் தொகுதி மக்களுக்கு என்னவெல்லாம் செய்வேன் என்று கூறியபடி ஒத்த ஆளாகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து வேட்பாளர் ரகு தெரிவிக்கையில், “மனிதர்கள் சைக்கிளைப் பயன்படுத்திய காலத்தில் தங்களின் அன்றாடத் தேவைக்காக மட்டுமே சம்பாதித்தனர். ஆனால் இயந்திர பயன்பாடுகள் அதிகரிக்க அதிகரிக்கப் பணத் தேவையும் கூடி, ஊழலும் பெருமளவில் பெருகத் தொடங்கிவிட்டது. இந்த எதார்த்தத்தை மக்களுக்கு வெளிப்படுத்தும் நோக்கிலேயே சைக்கிளில் சென்று பிரச்சாரம் செய்து வருகிறேன்” எனக் குறிப்பிட்டார். தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் இவரது வித்தியாசமான பிரச்சார முறையை வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன