தமிழ்நாடு

மதுராந்தகத்தில் அக். 3-ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்: செப். 29-ல் கனிமொழி ஆதரவு திரட்டுகிறார்!

சென்னை: இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள மதுராந்தகம் தொகுதியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் அக்டோபர் 3-ம் தேதி தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. இதன் தொடக்கமாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வரும் செப்டம்பர் 29-ம் தேதி தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 3-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதுராந்தகத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகிறார். திமுகவின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து மதுராந்தகத்தில் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன