புதுச்சேரி

காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி: உதவித்தொகையுடன் வாய்ப்பு!

காரைக்கால், 21/9/2026:

புதுச்சேரி அரசின் கீழ் இயங்கும் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் புதுச்சேரி தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம் (SC/ST) இணைந்து, எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மாணவ-மாணவிகளுக்கான இலவச கணினி தொழில் பயிற்சித் திட்டத்தை அறிவித்துள்ளன.

NIELIT அங்கீகாரம் பெற்ற இத்திட்டத்தின் கீழ் ‘கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிசினஸ் அக்கவுண்டிங் அசோசியேட்’ (Computer Application Business Accounting Associate) பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக்கான புத்தகங்கள் மற்றும் உதவித்தொகை ஆகியவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். மேலும், பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட NCVT சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் சேர 18 முதல் 30 வயதுக்குட்பட்ட, பிளஸ் 2 அல்லது 2 ஆண்டுகள் ஐடிஐ முடித்த மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ், சாதி மற்றும் வருமானச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தக நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகவல்கள் மற்றும் சேர்க்கைக்கு ‘Course Coordinator, NIELIT Course, அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காரைக்கால் – 609605’ என்ற முகவரியிலோ அல்லது 9443071274 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன