தமிழ்நாடு

திண்டிவனத்தில் மணற்கேணி பதிப்பகம் சார்பில் நிகரி விருதுகள் வழங்கும் விழா: எம்.பி. துரை.ரவிகுமார் பங்கேற்பு!

திண்டிவனம், செப். 20:
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான துரை.ரவிகுமாரின் மணற்கேணி பதிப்பகம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் நிகரி விருது வழங்கும் விழா திண்டிவனத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிகுமார் தலைமை வகித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று விருதுகளை வழங்கிச் சிறப்பித்தனர். பேராசிரியர்கள் க.பஞ்சாங்கம் மற்றும் ப.கல்யாணி ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். கல்வி மற்றும் சமூகப் பணியில் சிறந்து விளங்குபவர்களைப் பாராட்டும் நோக்கில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் பள்ளி ஆசிரியர் பஞ்சாட்சரம் மற்றும் கல்லூரி பேராசிரியர் தமிழ்வேலு ஆகியோருக்கு ‘சமத்துவ ஆசிரியர் விருதுகள்’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. மேலும், மக்கள் பணியில் தடம் பதித்த திரு. கணேசன் அவர்களுக்கு ‘மக்கள் நூலகர் விருது’ வழங்கிப் பாராட்டப்பட்டது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன