புதுச்சேரி

ஆனந்தா நகரில் நாளை குடிநீர் வினியோகம் தடை: பராமரிப்பு பணி காரணம்

புதுச்சேரி ஆனந்தா நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை குடிநீர் வினியோகம் தடை செய்யப்படும் என பொதுப்பணித்துறையின் பொது சுகாதார கோட்டம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆனந்தா நகர், கதிர்காமம், ராதாகிருஷ்ணா நகர், மீனாட்சிப்பேட்டை, லாஸ்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் என்றும், மாலை 5:30 மணிக்கு பிறகு வழக்கம்போல் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன