தேசியம்

கர்நாடகாவில் 1,200 படுக்கைகள் கொண்ட அதிநவீன மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்டார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

ஹூப்ளி: கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜேஜிஎம்எம் மருத்துவக் கல்லூரி மற்றும் கேஎல்இ (KLE) மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் புதிய வளாகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் பார்வையிட்டார்.

நவீன மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய வளாகத்தில் 250 எம்பிபிஎஸ் (MBBS) மருத்துவக் கல்வி இடங்களும், பொதுமக்களுக்கான 1,200 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கர்நாடகா முழுவதும் உலகத்தரம் வாய்ந்த சுகாதார மற்றும் மருத்துவ சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் இந்த மையம் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, கேஎல்இ நிறுவனம் கடந்த 110 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு நாட்டிற்கு அளப்பரிய சேவையாற்றி வருவதாகப் புகழாரம் சூட்டினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன