புதுச்சேரி

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச இதய நோய் பரிசோதனை முகாம்

புதுச்சேரி, செப். 19:

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள ஃபாத்திமா மேல்நிலைப் பள்ளியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 20) இலவச இதய நோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்களிடையே இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரம்ப நிலையிலேயே இதய பாதிப்புகளைக் கண்டறியவும் இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மார்டின் குழுமம், மார்டின் அறக்கட்டளை, ரோட்டரி கிளப் ஆஃப் புதுச்சேரி குளோயிங் ஸ்டார்ஸ் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் (PIMS) ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்துகின்றன. அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை முகாம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில் பிம்ஸ் (PIMS) மருத்துவமனையின் தலைசிறந்த இதய நோய் நிபுணர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச இதய பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்க உள்ளனர். எனவே, பொதுமக்கள் மற்றும் இதய பாதிப்பு அறிகுறிகள் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் உடல்நலனைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு அமைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன