புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் தீவிர ஆய்வு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கும், வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்குமான மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர். புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் இந்த வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு வாக்கு எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு அறைகளுக்கான அடிப்படை உள்கட்டமைப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொது பார்வையாளர் கொர்ரிலா சுவர்ண பாண்டா தாஸ் மற்றும் காவல் பார்வையாளர் ஓம் பிரகாஷ் திரிபாதி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வாக்கு எண்ணிக்கை நாளுக்கான பாதுகாப்பு அம்சங்கள், சிசிடிவி கண்காணிப்பு மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கான வசதிகள் குறித்து அதிகாரிகள் விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன