புதுச்சேரி

புதுச்சேரி விமான நிலையத்தில் யாத்ரி சேவா அபியான்: மாணவர்களின் விழிப்புணர்வு ஓவியங்கள் கண்காட்சி!

புதுச்சேரி விமான நிலையத்தில் ‘யாத்ரி சேவா அபியான்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ, மாணவிகள் வரைந்த அர்த்தமுள்ள விழிப்புணர்வு ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) கீழ் இயங்கும் புதுச்சேரி விமான நிலையத்தில், பயணிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் சேவை மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஓவியக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட இளம் மாணவர்கள் தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் பல வண்ண ஓவியங்களைத் தீட்டி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் மற்றும் அதிகாரிகளை வெகுவாகக் கவர்ந்த இந்த விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்த மாணவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன