தமிழ்நாடு

சென்னையில் ‘இதழியல் களத்தில் பெரியார்’ நூல் வெளியீட்டு விழா: ஆ.ராசா எம்.பி. சிறப்புரை!

சென்னை, செப். 17:
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தந்தை பெரியாரின் அரிய படைப்புகளைக் கொண்ட ‘இதழியல் களத்தில் பெரியார்’ என்ற நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. குடியரசு மற்றும் விடுதலை ஆகிய ஏடுகளில் தந்தை பெரியார் எழுதிய 450-க்கும் மேற்பட்ட இதழியல் கட்டுரைகள் இந்நூலில் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

இவ்விழாவிற்கு தோழர் செல்வின் சந்திரராஜன் தலைமை தாங்கினார். தோழர் செங்கொடி வரவேற்புரை வழங்க, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் நூலின் அறிமுக உரையை நிகழ்த்தினார். திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. இராசா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் புதுச்சேரி மாநில திமுக மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.பி. மணிமாறன் மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக மத்திய ஒன்றிய கழக செயலாளர் கோ. செழியன் ஆகியோர் கலந்து கொண்டு நூலின் முதல் பிரதிகளை ஆ.இராசா எம்.பி.யிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் முருகை நடராஜன், ஏ.பி. சதீஷ், பூபாலன், விஜய், விஷால் உள்ளிட்ட திராவிட இயக்கத் தோழர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். நிறைவாக தோழர் திராவிடச் செல்வன் நன்றி கூறினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன