சென்னையில் வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் புதிய உலகளாவிய திறன் மையம்: முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை, செப். 18:
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Walgreens India Private Limited) நிறுவனத்தின் புதிய திறன் மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
தமிழ்நாடு அரசால் சென்னையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஓ.எம்.ஆர் ஜி.சி.சி (OMR GCC) வழித்தடத்தில் அமைந்துள்ள தரமணி டி.எல்.எஃப் டவுன்டவுன் (DLF Downtown) வளாகத்தில் இந்நிறுவனத்தின் முதல் உலகளாவிய திறன் மையம் (Global Capability Centre) அமைக்கப்பட உள்ளது.
இப்புதிய மையத்தின் மூலம் முதலாம் ஆண்டிலேயே 250 நபர்களுக்கு உயர்மதிப்பு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். மேலும், வரும் ஆண்டுகளில் இந்த உலகளாவிய திறன் மையம் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



