தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: வேட்பாளர்களின் சொத்து மதிப்பு வெளியீடு – அசோக் ஆனந்த் முதலிடம்!
புதுச்சேரி, செப். 17: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களின்படி அவர்களின் சொத்து விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.
வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திர விவரங்களின்படி, வேட்பாளர் அசோக் ஆனந்த் அதிகபட்சமாக ரூ.344 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வேட்பாளர் விநாயகத்திடம் ரூ.9.42 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.
மேலும், வேட்பாளர் சலீம் தனக்கு ரூ.1.93 கோடி மதிப்பிலும், வேட்பாளர் கார்த்திக் குமாரி ரூ.37.46 லட்சம் மதிப்பிலும் சொத்துகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். வேட்பாளர் சேதுசெல்வம் தன்னிடம் ரூ.5 லட்சம் மதிப்பிலான சொத்துகள் மட்டுமே இருப்பதாகத் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களின் இந்த சொத்து விவர பட்டியல் தொகுதி வாக்காளர்களிடையே பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

