உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு முதலியார்பேட்டை எம்.எல்.ஏ ஜான் குமார் பிறந்தநாள் வாழ்த்து!

புதுச்சேரி: புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, முதலியார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜான் குமார் அவர்கள் நேரில் சந்தித்து தனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, மாண்புமிகு உள்துறை அமைச்சருக்கு பொன்னாடை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டன. மேலும், அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மக்கள் பணியாற்றிட இறைவனைப் பிரார்த்திப்பதாக சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்தும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தங்களது வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.


