புதுச்சேரி

புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு நேரடி நேர்காணல் அறிவிப்பு!

புதுச்சேரி, 7/9/2026: புதுச்சேரி லாஸ்பேட்டையில் இயங்கி வரும் பாண்டிச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் (Pondicherry University Community College – PUCC), 2026–27-ஆம் கல்வியாண்டிற்கான தற்காலிக கவுரவ விரிவுரையாளர் (Guest Faculty) பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி நேர்காணல் (Walk-in-Interview) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பயோ-கெமிஸ்ட்ரி (SC – 1 இடம்) மற்றும் விசுவல் கம்யூனிகேஷன் (SC – 1 இடம்) ஆகிய துறைகளுக்கு செப்டம்பர் 8-ஆம் தேதியும், காமர்ஸ் (ST – 1 இடம்) மற்றும் உடற்கல்வி மற்றும் யோகா (EWS – 1 இடம்) துறைகளுக்கு செப்டம்பர் 9-ஆம் தேதியும், கணினி அறிவியல் (Computer Science, OBC – 1 இடம்) துறைக்கு செப்டம்பர் 10-ஆம் தேதியும் நேர்காணல் நடைபெற உள்ளது. இத்தேர்வுகள் அனைத்தும் லாஸ்பேட்டையிலுள்ள கல்லூரி முதல்வர் அலுவலக அறையில் திட்டமிடப்பட்ட நேரங்களில் நடைபெறும்.

யுஜிசி (UGC) விதிகளின்படி உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி (Ph.D) பட்டம் மற்றும் நெட்/ஸ்லெட் (NET/SET/SLET) தேர்ச்சி பெற்றவர்களுக்கும், சமுதாயக் கல்லூரிகளில் கற்பித்தல் அனுபவம் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் விரிவுரையாளர்களுக்கு ஒரு விரிவுரைக்கு ரூ.1,500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50,000 வரை மதிப்பூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு (Bio-data), அசல் சான்றிதழ்கள் மற்றும் 3 நகல்களுடன் நேர்காணல் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே ஆஜராக வேண்டும். மேலும், நேர்காணல் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே துறைத் தலைவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும், கல்லூரி முதல்வரின் மின்னஞ்சல் முகவரிக்கும் (principal.pucc@pondiuni.ac.in) ஆவணங்களின் மென்நகலை (Soft Copy) அனுப்பி வைக்க வேண்டும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன