புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக்: முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான முதல்கட்ட இட ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி, செப். 07: புதுச்சேரி சென்டாக் (CENTAC) மூலம் 2026-2027 கல்வியாண்டிற்கான முதுநிலை பல் மருத்துவம் (M.D.S.) படிப்புகளுக்கான முதற்கட்ட தற்காலிக இட ஒதுக்கீட்டுப் பட்டியல் (Round 1 Provisional Allotment List) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான இந்த பட்டியல், மாணவர்களின் மறுப்புகள் மற்றும் புகார்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது ‘Login Dashboard’ விவரங்களைப் பயன்படுத்தி இட ஒதுக்கீட்டு நிலையை அறிந்து கொள்ளலாம் என்றும், சேர்க்கை ஆணைக்கான ‘Allotment Order’ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடு பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் சேர்க்கை ஆணையை எடுத்துக்கொண்டு வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியின் முதல்வரிடம் நேரில் ஆஜராகி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.

கட்டண விவரங்கள் சென்டாக் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள நிலையில், ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் தங்களது டேஷ்போர்டில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சென்டாக் வங்கிக் கணக்கிற்கு ஆன்லைன் மூலம் கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்றுள்ள புதுச்சேரியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (SC/ST) மாணவர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை எனவும், அவர்களுக்கான கட்டணத்தை ஆதிதிராவிடர் நலத்துறை ஏற்கும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0413-2655570 அல்லது 2655571 ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன