தேசியம்

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க தீவிர நடவடிக்கை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி

போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருவதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கோவா மாநில தலைநகர் பனாஜியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை வேரறுப்பது மிக அவசியமானது என்றார். இதற்காக அனைத்து மாநில காவல் துறைகளும், மத்திய புலனாய்வு மற்றும் போதைப்பொருள் தடுப்பு முகமைகளும் ஒருங்கிணைந்து விரிவான உத்திகளை வகுத்து செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக கடல்சார் எல்லைகள் மற்றும் சர்வதேச எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சர்வதேச நெட்வொர்க்குகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், ஆரோக்கியமான மற்றும் போதைப்பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்குவதில் மக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பங்களிப்பும் அவசியம் என்று அமித் ஷா வலியுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன