காரைக்கால், வில்லியனூர், அரியாங்குப்பத்தில் லோக்ஓஎஸ் (LokOS) புத்தாக்கப் பயிற்சி முகாம் நிறைவு

புதுச்சேரி, செப். 07:
புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) மற்றும் புதுச்சேரி மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (DAY-PRLM) சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் ‘லோக்ஓஎஸ்’ (LokOS) புத்தாக்கப் பயிற்சி முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது.
காரைக்கால், வில்லியனூர் மற்றும் அரியாங்குப்பம் ஆகிய வட்டாரங்களில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை இந்த தீவிரப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தின் தேசிய வள அமைப்பு (NRO Andhra Pradesh) வல்லுநர்கள் மற்றும் லோக்ஓஎஸ் திட்டக் குழுவினரின் முழுமையான வழிகாட்டுதலுடன் இப்பயிற்சி அளிக்கப்பட்டது.
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் கிராம அளவிலான கூட்டமைப்புகளின் தரவுகளை டிஜிட்டல் தளத்தில் துல்லியமாகப் பதிவு செய்தல், நிதிப் பரிவர்த்தனைகளைக் கண்காணித்தல் மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவது குறித்து களப்பணியாளர்களுக்கு விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் கிராமப்புற வாழ்வாதார இயக்கப் பணிகள் மேலும் விரைவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.