மாணவர்களுக்கு நல்வழிகாட்டும் வழிகாட்டிகள் ஆசிரியர்கள்: ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. ஆசிரியர் தின வாழ்த்து!
காரைக்கால்: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, காரைக்கால் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக மூத்த தலைவருமான ஏ.எம்.எச். நாஜிம் ஆசிரியப் பெருமக்களுக்கு தனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பாடப்புத்தகங்களைத் தாண்டி மாணவர்களின் சிந்தனையிலும் வாழ்விலும் மிகப்பெரிய நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். நல்ல வழிகாட்டிகளான ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், எதிர்காலத்தில் நல்லதொரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் திறன்படைத்தவர்களாக உயர்கிறார்கள் என புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், மாணவர்களுக்கு அறிவையும் நற்பண்புகளையும் ஒருசேர ஊட்டி, அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்த திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்வதாக காரைக்கால் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.



