புதுச்சேரி

முத்துப்பிள்ளைபாளையத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான ஆயுஷ்மான் பாரத் அட்டை பதிவு சிறப்பு முகாம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில சுகாதார முகமை (SHA – AB PMJAY) சார்பில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு அட்டை (BIS Card) பதிவு செய்யும் சிறப்பு முகாம் முத்துப்பிள்ளைபாளையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ், 70 வயது நிரம்பிய அனைத்து மூத்த குடிமக்களுக்கும் மருத்துவ காப்பீட்டு பலன்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதனையொட்டி புதுச்சேரி மாநில சுகாதார முகமை மூலம் பல்வேறு பகுதிகளில் சிறப்புப் பதிவு முகாம்கள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

முத்துப்பிள்ளைபாளையத்தில் நடைபெற்ற இந்த முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட ஏராளமான முதியவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது விவரங்களைப் பதிவு செய்து ஆயுஷ்மான் அட்டைகளைப் பெற்றனர். தகுதியுள்ள மூத்த குடிமக்கள் அனைவரும் தங்கள் ஆதார் அட்டையுடன் இத்தகைய முகாம்களில் கலந்துகொண்டு இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன