புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் பள்ளியில் சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவிகளுக்கு முக்கிய ஆலோசனைகள்!

புதுச்சேரி: புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இணையவழி குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை ‘புதுச்சேரி பெண்கள் மாநாடு’ (Puducherry Women’s Conference) அமைப்பு ஒருங்கிணைத்து நடத்தியது. இன்றைய டிஜிட்டல் சூழலில் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது, ஆன்லைன் மோசடிகள், தனிநபர் தகவல் திருட்டு மற்றும் இணைய அச்சுறுத்தல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து மாணவிகளுக்கு விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இணையவழியில் ஏற்படும் தவறான அணுகுமுறைகள் மற்றும் குற்றங்களை எவ்வாறு கண்டறிவது, அவசர உதவி எண்கள் மற்றும் சைபர் கிரைம் பிரிவில் எவ்வாறு புகார் அளிப்பது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் மாணவிகளுக்கு மிகவும் அவசியமான இந்த விழிப்புணர்வு முகாமில் ஆசிரியர்கள் மற்றும் திரளான மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றுப் பயனடைந்தனர்.
