ஏனாம்
ஏனாமில் உலக தென்னை தின விழா: விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார் ஆட்சியர் சிவராஜ் மீனா!

ஏனாம்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியத்தில் வேளாண் துறை சார்பில் உலக தென்னை தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏனாம் பிராந்திய ஆட்சியர் சிவராஜ் மீனா கலந்துகொண்டு நிகழ்வை முறைப்படி தொடங்கி வைத்தார். தென்னை சாகுபடியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஆட்சியர் வளாகத்தில் தென்னங்கன்றை நட்டு வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மேம்பட்ட தரத்திலான தென்னங்கன்றுகளை அவர் வழங்கிச் சிறப்பித்தார். தென்னை உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் வேளாண் துறை மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகள் விவசாயிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிகழ்வில் வேளாண் துறை அதிகாரிகள், துறைசார் ஊழியர்கள் மற்றும் உள்ளூர் விவசாயிகள் பெருமளவில் பங்கேற்றனர்.