காரைக்கால்

நெடுங்காடு தொகுதியில் 43 அங்கன்வாடி மையங்களும் இயங்கும் நிலையில் இல்லை: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ விக்னேஸ்வரன் வேதனை!

புதுச்சேரி: காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் உள்ள 43 அங்கன்வாடி மையங்களில் ஒன்று கூட பயன்பாட்டில் இயங்கும் நிலையில் இல்லை என சட்டப்பேரவையில் தொகுதி எம்.எல்.ஏ விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ விக்னேஸ்வரன் பேசுகையில், “நெடுங்காடு தொகுதியில் உள்ள 43 அங்கன்வாடி மையங்களின் கட்டடங்கள் மிகவும் பாழடைந்து, எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி காணப்படுகின்றன. இவற்றில் ஒரு மையம் கூட முழுமையாக இயங்கும் தகுதியுடன் இல்லை” என்று வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.

மேலும், கிராமப்புறக் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து தேவைகளை உறுதிசெய்யும் வகையில், உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பழுதடைந்த அனைத்து அங்கன்வாடி மையங்களையும் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன