புதுச்சேரி

புதுச்சேரியில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்கக் கோரிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில், யூனியன் பிரதேசத்தில் உச்சநீதிமன்றத்தின் கிளை அமைக்கப்பட வேண்டும் என்று காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கவனீர்ப்பு கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம், “புதுச்சேரிக்கு முதலில் உயர்நீதிமன்றக் கிளை கிடைப்பதற்காகவே அரசு தொடர்ந்து தீவிரமாகப் போராடி வருகிறது. எனவே, உயர்நீதிமன்றக் கிளை அமைக்கப்பட்ட பிறகு, அடுத்தகட்டமாக உச்சநீதிமன்றக் கிளை கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நீதித்துறை வசதிகளை மேம்படுத்தவும், புதுச்சேரி மக்களுக்கு விரைவான மற்றும் எளிய நீதி கிடைக்கவும் எடுக்கப்பட்டு வரும் இந்த முன்னெடுப்புகள் சட்டப்பேரவையில் முக்கிய விவாதப் பொருளாக அமைந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன