புதுச்சேரி

புதுச்சேரி பொதுப்பணித்துறை ஊழியர்கள் பணி நிரந்தரம்: சட்டசபையில் குரல் கொடுத்த எம்.எல்.ஏ ரவிக்குமாருக்கு கூட்டமைப்பு நன்றி!

புதுச்சேரி: புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளைச் சட்டமன்றத்தில் வலுவாக எதிரொலித்த சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாருக்கு, அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பணியாற்றி வரும் 1,311 வவுச்சர் ஊழியர்கள் மற்றும் 150 முழுநேர தற்காலிக ஊழியர்களை (FTCLR) உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய சட்டக் கூலியாக மாதம் ரூ. 26,910 வழங்கிட வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நியாயமான கோரிக்கைகளைச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ ரவிக்குமார் வலிமையாகப் பதிவு செய்து குரல் கொடுத்தார்.

நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள தற்காலிகப் பணியாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்குச் சட்டமன்றத்தில் நீதி கேட்டு குரல் எழுப்பிய மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்களுக்கு, அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் எம்.என். சரவணன் மற்றும் நிர்வாகிகள் கூட்டமைப்பின் சார்பாகத் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன