காரைக்கால்

காரைக்கால்: ராஜசோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்; ஆக.31 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை!

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருமலையராயன்பட்டினத்தில் அமைந்துள்ள அருள்மிகு அபிராமி அம்மன் உடனுறை அருள்மிகு ராஜசோழீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நிரவி–திருப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஆகஸ்ட் 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக பெருவிழா ஆகஸ்ட் 31 அன்று வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் எவ்வித சிரமமும் இன்றி கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்டு இறையருள் பெறுவதற்கு ஏதுவாக இந்த உள்ளூர் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, உடனடியாக உள்ளூர் விடுமுறை அறிவிக்க நடவடிக்கை மேற்கொண்ட புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி, உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகத்திற்கு நிரவி–திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மீனாட்சிசுந்தரம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன