ஆரோவில்லில் ஸ்ரீ அரவிந்தரின் 154-வது பிறந்தநாள் விழா: சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

புதுச்சேரி: சர்வதேச நகரமான ஆரோவில்லில், ஸ்ரீ அரவிந்தரின் 154-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, யூனிட்டி பெவிலியனில் (Unity Pavilion) “புதிய உலக கலாச்சாரத்திற்கான இந்திய மறுமலர்ச்சி” என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிரபல ஆய்வாளரும் எழுத்தாளருமான டாக்டர் பெலு மேஹ்ரா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, இந்தியாவின் கலாச்சார மறுமலர்ச்சி மற்றும் அது ஒரு புதிய உலகளாவிய கலாச்சாரத்தின் உருவாக்கத்திற்கு எவ்வாறு அடித்தளமாக அமைகிறது என்பது குறித்து விரிவாக விளக்கினார்.
ஸ்ரீ அரவிந்தரின் தொலைநோக்குப் பார்வையின்படி, இந்திய மறுமலர்ச்சி என்பது வெறும் கடந்த காலத்திற்குத் திரும்புவது மட்டுமல்லாமல், மனிதகுலப் பரிணாம வளர்ச்சிக்கும் விழிப்புணர்வு மிக்க எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும் படைப்பாற்றல் மிக்க விழிப்புணர்வு என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் ஆரோவில்வாசிகள் மற்றும் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
