புதுச்சேரியில் ‘வந்தே மாதரம்’ 150 ஆண்டுகள் மற்றும் ‘விக்சித் பாரத்’ நிகழ்ச்சி

புதுச்சேரியில் ‘வந்தே மாதரம்’ 150 ஆண்டுகள் மற்றும் ‘விக்சித் பாரத்’ நிகழ்ச்சி
புதுச்சேரி: கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மகிளா சமன்வயா சார்பில் ‘வந்தே மாதரம்’ 150 ஆண்டுகள் மற்றும் ‘விக்சித் பாரத் – யுவ சக்தி @2047’ நிகழ்ச்சி நடைபெற்றது.
நாட்டின் தேசப்பற்று மற்றும் இளைஞர்களின் பங்களிப்பை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 150-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு ‘வந்தே மாதரம்’ பாடலை ஒருமித்த குரலில் பாடினர்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், பாஜக மாநில தலைவர் வி.பி. ராமலிங்கம், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் ஆர். செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இளம் தலைமுறையினரிடையே தேசப்பற்று, தேசிய ஒருமைப்பாடு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது

