தமிழ்நாடு
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்: ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு (கேஸ்) சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் இந்த நலத்திட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டம் கொண்டுவரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இல்லத்தரசிகளின் மாதாந்திர எரிவாயு செலவினம் கணிசமாகக் குறையும் என்பதால், பெண்கள் மத்தியில் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அன்னபூரணி திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு இந்த இலவச சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் நடைமுறைகள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

