புதுச்சேரி

கிருமாம்பாக்கத்தில் இருசக்கர வாகன திருட்டு: இரு வாலிபர்கள் கைது

புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் உதவி காவல் ஆய்வாளர் சண்முக சத்யா தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனங்களில் வந்த இரு வாலிபர்களை தடுத்து விசாரணை மேற்கொண்டனர். வாகன ஆவணங்கள் இல்லாததால் சந்தேகம் வலுக்க, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை சேர்ந்த ஜெயகுமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. காட்டுக்குப்பம் மற்றும் கிருமாம்பாக்கம் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியதுடன், கடலூர், தூக்கனாம்பாக்கம், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி பகுதிகளிலும் முன்னர் திருடியிருப்பது கண்டறியப்பட்டது. இவர்களிடமிருந்து ஆறு இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

In brief (English)

Police arrested two people, including a 17-year-old, for a series of two-wheeler thefts across Puducherry and Cuddalore district, recovering six stolen vehicles.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன