சினிமா
கஸவு புடவையில் ஓணம் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை அனுமோல்

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலக நடிகையான அனுமோல், ஓணம் பண்டிகை நேரத்தில் பாரம்பரிய கஸவு புடவையில் கேரளாவின் பாரம்பரிய நாலுகெட்டு மாடி வீடு ஒன்றின் முன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களுடன் குறிப்பு எழுதிய அனுமோல், இந்த ஆண்டு கர்க்கடகம் மாதத்தையும், சிங்கம் மாத வருகையையும், கேரளாவின் அழகிய மழைக்காலத்தையும் தவறவிட்டு வீட்டை நினைத்து ஏக்கத்துடன் இருந்ததாக பகிர்ந்துள்ளார்.
‘சயிலியம்’, ‘இவன் மேகரூபன்’, ‘அகம்’, ‘வெடிவழிபாடு’ ஆகிய படங்களில் நடித்த அனுமோல், 2012ஆம் ஆண்டு சிறந்த முதல் நடிகைக்கான சூர்யா விருதை பெற்றவர். தமிழில் ‘அயலி’ இணைய தொடரில் ‘குருவம்மாள்’ கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டு பெற்ற இவர், ‘அனுயாத்ரா’ எனும் பயணத் தொடரையும் நடத்தி வருகிறார்.








