புதுச்சேரி

மருத்துவ மாணவர் சேர்க்கையில் போலி ஆவணங்கள் புகார்: வருவாய் குழு அமைக்க கோரிக்கை

புதுச்சேரி பெற்றோர் மாணவர் நலச்சங்க தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவை மாநிலத்தில் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த 32க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களின் மருத்துவ மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலிலும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபோலவே ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 64 இடங்களை அபகரிக்க 30க்கும் மேற்பட்ட வெளிமாநில மாணவர்கள் சென்டாக் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த, போலி ஆவணங்கள் மூலம் அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களை உடனடியாக நீக்க வேண்டுமென்றும், மாவட்ட ஆட்சியர் வருவாய் குழு அமைத்து அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டுமென்றும் பாலா கேட்டுக்கொண்டுள்ளார். ஜிப்மர் முதற்கட்ட கலந்தாய்வுக்கு முன் புதுச்சேரி மாணவர்கள் பெயர்கள் கொண்ட திருத்தப்பட்ட தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

In brief (English)

Puducherry parents’ association head Bala has demanded a revenue committee verify medical admission documents, alleging forged papers are being used to claim seats reserved for Puducherry students at JIPMER and elsewhere.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன