முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 11ஆம் ஆண்டு நினைவு நாள்: எல்.ஜே.கே சார்பில் அஞ்சலி
முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11ஆம் ஆண்டு நினைவு நாள் புதுச்சேரியில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. எல்.ஜே.கே தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த நிகழ்வில் அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கட்சியின் மூத்த ஆலோசகர் ஜெயசங்கர், விவசாய அணி தலைவர் செல்வம், இளைஞரணி துணைத்தலைவர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
The memorial anniversary of former President of India Dr. A.P.J. Abdul Kalam was commemorated at the Latchiya Jananayaga Katchi (LJK) headquarters in Reddiarpalayam, Puducherry. On the guidance of LJK founder and MLA Jose Charles Martin, party office bearers gathered to pay floral tributes to Kalam’s portrait. Senior advisor Jayasankar, agricultural wing leader Selvam, and youth wing vice president Zakir Hussain led the remembrance ceremony. Party leaders highlighted Dr. Kalam’s lasting vision for youth empowerment and nation-building during the homage gathering.