புதுச்சேரி தொழிற்பேட்டைகளில் உள்கட்டமைப்பு வசதிகள்: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி, மேட்டுப்பாளையம், சேதராப்பட்டு மற்றும் திருபுவனை தொழிற்பேட்டைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து, தொழில்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிற்பேட்டைகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பிப்டிக் (PIPDIC) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்த தொழிற்பேட்டைகளில், தொழிற்சாலைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அமைச்சர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, தொழிற்சாலைகளுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்குதல், குடிநீர் வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அவர் சில அறிவுறுத்தல்களை வழங்கினார்.