புதுச்சேரி

தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை கோரிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 3 அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு காமராஜ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக வனத்துறையின் நடவடிக்கை மனிதநேயமற்றது எனக் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கோரிக்கை விடுத்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன