புதுச்சேரி
சுசீலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
புதுச்சேரி சுசீலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு தலைப்புகளில் மாணவிகள் உருவாக்கிய 100-க்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் கணித மாதிரிகள் இடம்பெற்றன. சிறந்த ஆசிரியர் விருது பெற்ற ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று படைப்புகளை மதிப்பீடு செய்தார். சிறந்த மாதிரிகளை உருவாக்கிய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
In brief (English)
A school science exhibition at Susilabai Government Girls Higher Secondary School featured more than 100 science and math models prepared by students.


