தமிழ்நாடு
ஐஐடி மெட்ராஸ் பார்வையிட்ட ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸை லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேரில் பார்வையிட்டு, அதன் பாரம்பரிய மையத்தில் (Heritage Centre) ஐஐடி மெட்ராஸின் வரலாறு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை அறிந்துகொண்டார்.
தொடர்ந்து, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடியை சந்தித்து, செயற்கை நுண்ணறிவு (AI), புதுமையான தொழில்நுட்பங்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் எதிர்கால தொழில்நுட்பக் கூட்டிணைவு தொடர்பாக அவர் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் ஐஐடி மெட்ராஸ் பாரம்பரிய மைய துறையைச் சேர்ந்த திருமதி மம்தா அவர்களும் கலந்து கொண்டு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாடு, தொழில்நுட்பக் கல்வி, புதுமை மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினார்.
