தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் அவசர நிலை: கொல்கத்தாவிலிருந்து வந்த இண்டிகோ விமானத்தின் இன்ஜின் செயலிழப்பு – 224 பேர் உயிருடன் தப்பினர்

சென்னை, ஆகஸ்ட் 12: கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானம் 6E-723-ல் நேற்று (ஆகஸ்ட் 11) இரவு திடீரென இடது இன்ஜின் செயலிழந்தது. இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் ‘புல் எமர்ஜென்சி’ (Full Emergency) அறிவிக்கப்பட்டது.

விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக தீயணைப்புப் படை மற்றும் மீட்புக் குழுக்களை ஓடுதளத்தில் தயார் நிலையில் வைத்தனர். அதிர்ஷ்டவசமாக, விமானம் பாதுகாப்பாக 25-ம் ஓடுதளத்தில் தரையிறங்கியது.

224 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் உயிருடன், எந்தவிதப் படுகாயமும் இன்றி தப்பினர். இன்ஜின் செயலிழப்புக்கான காரணம் குறித்து விமான பொறியியல் வல்லுநர்கள் விரிவான ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன