புதுச்சேரி

பூரணாங்குப்பத்தில் முதன்முறையாக தேசிய அளவிலான சிலம்பம் போட்டி

புதுச்சேரி பூரணாங்குப்பத்தில் மாமல்லன் சிலம்பம் மற்றும் நாட்டுப்புற கலை வளர்ச்சி கழகத்தின் சார்பில் முதன்முறையாக தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது சிலம்ப திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்நீகழ்வில் முன்னாள் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

In brief (English)

A national-level Silambam competition was conducted at Pooranankuppam in Puducherry, where MLA Jose Charles Martin distributed prizes to winning students.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன