புதுச்சேரி

புதுவையில் முத்தமிழ் கலை சங்கமம் சார்பில் 80வது சுதந்திர தின வரவேற்பு விழா

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் உள்ள புதுவை தமிழ் சங்கத்தில் முத்தமிழ் கலை சங்கமம் ஒருங்கிணைப்பில் 80வது சுதந்திர தின வரவேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். இதே நிகழ்வில் புதுவை தமிழ் சங்கத்தின் தலைவர் முனைவர் முத்துவின் சேவையை பாராட்டி தபால் தலை வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

In brief (English)

Latchiya Jananayaga Katchi leader Jose Charles Martin attended the 80th Independence Day reception organized by Muthattamizh Kalai Sangamam in Puducherry and presented awards to achievers.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன