தமிழ்நாடு

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டை உயர்த்த குழு

மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்ய புதிய குழு அமைக்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார். குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், ஒதுக்கீட்டை உயர்த்துவது தொடர்பாக அரசு முடிவு எடுக்கும் என அவர் கூறினார்.

நீட் தேர்வில் தகுதி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் தற்போது 7.5 சதவீத உள் ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இந்த ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவது குறித்து முன்பே ஆலோசனைகள் நடைபெற்ற நிலையில், இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன