தமிழ்நாடு
கோயில் அறங்காவலர் தேர்வுக்குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்தை, தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கோயில் அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினராக தமிழக அரசு நியமித்துள்ளது. கோயில்களுக்கான பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை தேர்வு செய்யும் பணியில் இந்தக் குழு செயல்படும்.
தமிழகம் முழுவதும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள அறங்காவலர் பதவிகளை நிரப்பும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறைக்கு உதவும் வகையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நடிகர் திரிஷாவின் நெருங்கிய தோழி என்ற அடையாளத்தையும் கொண்ட அர்ச்சனா கல்பாத்தி, திரைப்படத் தயாரிப்பு துறையில் செயல்பட்டு வருகிறார். அவரின் நியமனம் தற்போது கவனம் பெற்றுள்ளது.