புதுச்சேரி
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவுக்கு துணை குடியரசுத் தலைவர் பயணம்

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவுக்கு இன்று பயணம் மேற்கொண்டார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1943 டிசம்பரில் அந்தமான் தீவுகளுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டபோது தங்கியிருந்த கட்டடத்தை அவர் பார்வையிட்டார். மேலும், தேவாலயம், ராணுவ வீரர்கள் தங்கும் முகாம், கன் பாயிண்ட் பகுதி மற்றும் ஸ்மிரிதிகா அருங்காட்சியகம் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் பார்வையிட்டார்.
தீவின் வளமான வரலாறு மற்றும் எதிர்கால வளர்ச்சிக்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து அதிகாரிகள் துணை குடியரசுத் தலைவரிடம் விளக்கமளித்தனர்.






