புதுச்சேரி

பாதசாரிகள் பாதுகாப்புக்காக புதுச்சேரியில் ஸ்மார்ட் சிக்னல் அறிமுகம்

போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், புதுச்சேரி-கடலூர் சாலையில் தவளக்குப்பம் சந்திப்பில் ஸ்மார்ட் போக்குவரத்து சிக்னல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சிக்னல் வழியாகச் சாலையைக் கடக்கும் பாதசாரிகளுக்கு, எப்போது கடக்கலாம், எப்போது காத்திருக்க வேண்டும் என்பதை ஒலிப்பதிவு மூலம் அறிவுறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிக்னல் பச்சை விளக்குக்கு மாறும்போது, பாதசாரிகள் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க ஆடியோ அறிவிப்பு ஒலிக்கிறது. இதன் மூலம் குழந்தைகள், முதியவர்கள், பார்வைக் குறைபாடுடையோர் உள்ளிட்டோர் எளிதாகவும் பாதுகாப்பாகவும் சாலையைக் கடக்க முடியும்.

தவளக்குப்பம் சந்திப்பில் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்து, விதிமீறல்கள் மற்றும் விபத்துகளைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்துக் காவல்துறை இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் சிக்னல் திட்டம் பயனளித்தால், புதுச்சேரியின் பிற முக்கிய சந்திப்புகளிலும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன