தமிழ்நாடு

பண்ருட்டி முந்திரி நிறுவன ஊழியர்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள முந்திரி நிறுவன ஊழியர்களுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் லிடியா செல்வி தலைமையிலான போலீசார் இதில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.

பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய தொல்லைகள், குழந்தைகளின் பாதுகாப்பு, இணையவழிக் குற்றங்கள், புகார் அளிக்கும் நடைமுறைகள் குறித்து ஊழியர்களிடம் விளக்கப்பட்டது. அவசர நிலைகளில் காவல்துறையின் உதவியை உடனடியாகப் பெறும் வகையில் ‘காவல் உதவி’ செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

‘காவல் உதவி’ செயலியில் உள்ள அவசர அழைப்பு வசதியைப் பயன்படுத்தினால், பயனரின் இருப்பிடம் கட்டுப்பாட்டு அறைக்குப் பகிரப்பட்டு அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது ரோந்து வாகனத்திற்குத் தகவல் அனுப்பப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் அல்லது குற்றங்கள் ஏற்பட்டால் தயக்கமின்றி காவல்துறையை அணுக வேண்டும் என போலீசார் வலியுறுத்தினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன