தேசியம்
திரைப்பட திருட்டுக்குக் கடும் நடவடிக்கை: 7,393 ஆன்லைன் இணைப்புகள் முடக்கம்
திரைப்பட திருட்டு மூலம் ஆயிரக்கணக்கான புதிய, பழைய படங்கள் சட்டவிரோதமாக இணையத்தில் பரவி வரும் நிலையைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு பெரிய அளவிலான நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய தகவல்-ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்ததின்படி, திரைப்பட திருட்டு தொடர்பான புகார்கள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை மூலம் 4,996 டெலிகிராம் சேனல்கள், சட்டவிரோதமாகப் படங்கள், வலைத் தொடர்கள், காட்சிகள் பகிரப்படும் 1,263 இணையதளங்கள் உட்பட மொத்தம் 7,393 ஆன்லைன் இணைப்புகள் இன்று வரை முடக்கப்பட்டுள்ளன.
இந்தச் சேனல்கள், புதிய படங்கள் திரையரங்கில் வெளியான சில மணி நேரத்திலேயே முழுப் படம், க்ளிப்புகள், டப்பிங் செய்யப்பட்ட வடிவங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றி, ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு இலவசமாக அல்லது சந்தாக் கட்டணம் மூலம் பகிர்ந்து வந்ததாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.



