புதுச்சேரி

அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு நாள் அனுசரிப்பு

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில், முன்னாள் பிரதமரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் க. கைலாஷ்நாதன், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் அ. அன்பழகன், உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், பாஜக மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், முதலியார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அ. ஜான் குமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரமும் கலந்து கொண்டனர். அனைவரும் அடல் பிகாரி வாஜ்பாயின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லாட்சிக்கும் வாஜ்பாய் ஆற்றிய பங்களிப்புகளை நிகழ்ச்சியில் பங்கேற்றோர் நினைவுகூர்ந்தனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன