தமிழ்நாடு
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க தமிழ்நாட்டில் 65 சிறப்பு அதிரடி படைகள் உருவாக்கம்
தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருட்கள் புழக்கம் மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக 65 சிறப்பு அதிரடி படைகளை (Special Action Squads) உருவாக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆவடி, தாம்பரம், சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மாநகர பகுதிகளில் தலா 2 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
In brief (English)
The Tamil Nadu government issued an order establishing 65 special action squads across key cities and districts to eradicate illicit drug trafficking.