₹22.30 கோடியில் தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் அமைப்பு
தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு ஆண்டிற்கு 670 கோடி தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. விவசாயிகளுக்கு நிலையான விலை மற்றும் சந்தை வாய்ப்பை ஏற்படுத்த வேளாண் விற்பனை துறை மூலம் தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் அமைக்கப்படுகிறது. இக்கழகம் அறுவடைக்குப் பிந்தைய கட்டமைப்பு, பதப்படுத்துதல், தரம் பிரித்தல் மற்றும் ஏற்றுமதி ஆலோசனைகளை வழங்கும். இத்திட்டத்திற்காக 22 கோடியே 30 லட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நோய் மேலாண்மை மற்றும் தென்னை டானிக் உள்ளிட்ட ஒட்டுமொத்த தென்னை மேம்பாட்டுக்கு ₹16 கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
In brief (English)
Tamil Nadu is setting up a dedicated Coconut Processing Corporation with a ₹22.30 crore budget to help coconut farmers process, package, and market their produce efficiently.